பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை அறிவித்தார்.

மேலும் இடை நிலை ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறும் எனவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மே 30-ம் தேதி நடத்தப்படுகிறது எனவும் குறிபிட்டுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.