Asianet News TamilAsianet News Tamil

எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகம் நிலம் ஆக்கிரமிப்பு - 20 தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

srm land-case-in-high-court
Author
First Published Nov 9, 2016, 4:31 AM IST


எஸ். ஆர். எம். பல்கலைகழகத்தில் பஞ்சமி நிலம் உள்ளிட்ட 37 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறி சதீஸ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாவட்ட கலெக்டர் மற்றும், வருவாய்துறை செயலாளர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
  
அந்த பதில் மனுவில் ஆக்கிரமிப்பை அகற்றது தொடர்பாக கூட்டுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு ஆக்கிரமிப்பு நிலங்களை ஆய்வு செய்து அதனை வகைப்படுத்தி உள்ளனர்.

srm land-case-in-high-court

அந்த ஆய்வின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் இடித்து விட்டனர். மேலும் ஒரு சில கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாகவும், வீரைவில் அதனையும் இடிக்கப்பட உள்ளதாக என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
   
முழு மையாக ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முழுமையாக அகற்றிவிட்டு அதன் முழு விபரங்களை  வருகிற 20ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல்  செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios