போலி போலி பெண் சாமியார் அன்னபூரணி மீது பலரும் புகார்கள் அளித்தும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி போலி பெண் சாமியார் அன்னபூரணி மீது பலரும் புகார்கள் அளித்தும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் போலி பெண் சாமியார் அன்னபூரணி சமீபத்தில் இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். பெண் சாமியாரான அன்னபூரணி பற்றிய தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளியாகி கொண்டு இருக்கின்றன. புத்தாண்டையொட்டி செங்கல்பட்டில் அவர் நடத்த இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சி தொடர்பான போஸ்டர்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற வீடியோக்களும், சாமியார் ஆன பிறகு அவர் அருள்வாக்கு கூறும் வீடியோக்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.

இதையடுத்து போலி பெண் சாமியார் அன்னபூரணி சர்ச்சை சாமியாராக பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டார். குடும்ப பிரச்சினைகளை பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியில் அன்னபூரணி பேசிய பேச்சுக்களையும், அவர் சாமியார் ஆன பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோக்களையும் குறிப்பிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 1 ஆம் தேதி நடக்க இருந்த அன்னபூரணியின் அவதார அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அன்னபூரணி அரசு அம்மா என்பவரைக் கைது செய்யகோரி இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக இந்து சேவா சங், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் போலிச் சாமியாராக வலம் வந்து தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி சொச்சைப்படுத்தும் பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடவுளின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும் அன்னபூரணி அரசு அம்மா என்பவரை மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்கத் தூண்டுதல், மதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல் புரிதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆண்கள் வந்தால் நல்ல சாமியார், பெண்கள் வந்தால் போலி சாமியாரா? அவர் பெண் என்பதால் திரும்ப திரும்ப அவர் பற்றி பேசி காயப்படுத்தக்கூடாது. அவர் விரக்தியில் ஏதோ செய்கிறார் என்று தெரிவித்துள்ளார். போலி பெண் சாமியார் அன்னபூரணி மீது பலரும் புகார்கள் அளித்தும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
