முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் தலைமையில் தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி தமிழக அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் பல்வேறு தரப்பினர் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் புதூர் பகுதியில் உள்ள தேவாலயதில் சிறப்பு பிராத்தனை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கோனாமேடு பகுதியில் உள்ள எல்லையம்மன் ஆலயதில் பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதில் அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்.