SPB lost passport america music programme

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தமது இசைப்பயணத்தின் 50வது ஆண்டை நிறைவு செய்கிறார். இதையொட்டி கனடா, மலேசியா, ரஷ்யா, இலங்கை, துபாய் உள்பட பல நாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில் இசை கச்சேரியில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்த கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். அப்போது, அவர் கொண்டு சென்ற பை திடீரென மாயமானது. அதை அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
அவரது பையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்ட், பணம் மற்றும் பாடல் குறிப்பேடு இருந்ததாக தனது முகநூர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
உடனடியாக அவர், புகார் அளித்ததால், இந்திய தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் புதிய பாஸ்போர்ட் தனக்கு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அதிகாரிகளுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். 
வழக்கமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மற்ற நாடுகளில் இசை கச்சேரி நடத்தி வந்தபோது, இசையமைப்பாளர் இளையராஜா, அவருக்கு வாழ்த்துகளை கூறி வந்தார்.
ஆனால், தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமெரிக்கா சென்றதும் தனது இசையில் வந்த பாடல்களை பாடக் கூடாது என அவருக்க நோட்டீஸ் அனுப்பினார். இதனால், திரைத்துறையில் சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.