திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பிரதியுஷா என்ற கிரிஸ்துவ பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க திருச்சி சிவா மறுத்து விட்டார்.

இதைதொடர்ந்து சூர்யா சிவாவும் பிரதியுஷாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே இருவருக்கும் திருச்சி சிவா பல இடையூறுகளை தருவதாக சூர்யா சிவா குற்றம் சாட்டி  வந்தார்.

இந்நிலையில், தனது தங்கை காயத்திரியின் கணவர் முத்துக்குமார் தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுப்பதாக திருச்சி சிவா மகன் சூர்யா சிவா டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த மனுவில் தனது தந்தை திருச்சி சிவாவுக்குப் பின் அனைத்து சொத்துக்களை அபகரிக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். 

எனவே முத்துக்குமாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.