SMS before power cut announced by EB

தமிழகத்தில் இனிமேல் மின் தடை ஏற்பட்டால் இதை முன்கூட்டியே நுகர்வோருக்கு அறிவிக்கும் வகையில் அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்டும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம், எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலையே உள்ளது.

அதுவும் அறிவிக்கப்படாத மின் வெட்டு என்பது பொது மக்களை நரகத்தில் தள்ளிவிடும் அளவுக்கு ஆபத்தானது. சில நேரம் நள்ளிரவில் மின் வெட்டு ஏற்பட்டால் சொல்லவே வேண்டாம்.

அதே நேரத்தில் மின் பராமரிப்பு வேலைகளை செய்யும்போது, முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தப்படுவது குறித்து நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்படுகின்றன.

இந்த அறிவிப்புகளை அனைவரும் பார்க்க முடியாது என்பதால் ஒரு வுதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு பகுதியில் எப்போதிருந்து மின்சாரம் நிறுத்தப்படும் போன்ற அறிவிப்புகளை நுகர்கோரின் செல்போன்களுக்கு தகவல் அனுப்ப மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின்தடை ஏற்பட உள்ளதை முன்கூட்டியே எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் திட்டத்தை, விரைவில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது,