Asianet News TamilAsianet News Tamil

காஞ்சிபுரத்தில் சைக்கிள், பைக், காரில் மணல் கடத்திய அறுவர் கைது…

Six arrested in sand in the car bicycle bike in Kanchipuram
Six arrested in sand in the car bicycle bike in Kanchipuram
Author
First Published Aug 16, 2017, 6:27 AM IST


காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தின் பல்வேறு இடங்களில் சைக்கிள், பைக், கார் போன்ற வாகனங்களில் ஆற்று மணலைக் கடத்திய ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுகிறது என்ற தகவல் காஞ்சீபுரம் தாலுகா காவலாளர்களுக்கு வந்தது. அதனையொட்டி அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு மணல் கடத்துவது உறுதியானது. இது தொடர்பாக சித்தாத்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (20) என்பவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

உத்திரமேரூரை அடுத்த பெருநகர் பகுதி செய்யாறு படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக பெருநகர் காவல் உதவி ஆய்வாளர் ரீனாவுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அங்கு காவலாளர்களுடன் சென்றார்.

அப்போது, அங்கு மணல் கடத்திய பெருநகரை அடுத்த மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வேலு (28), குணசேகரன் (28), கன்னியப்பன் (35), பிரகாஷ் (24) ஆகியோரை காவலாளர்கள் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஓடும் ஆரணி ஆற்றில் நேற்று அதிகாலை ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் மணிமனோகரன் மற்றும் காவலாளர்கள் ஆரணி ஆற்றுப்படுகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் ஆரணி ஆற்று ஓரமாக நின்றுக் கொண்டிருந்தது.

சந்தேகமடைந்த காவலாளர்கள் காரை நெருங்கியதும் அதில் இருந்தவர் ஓட்டம் பிடித்தார். உதவி ஆய்வாளர் மணிமனோகரன் அவரை துரத்திச் சென்று பிடித்தார். காரில் சோதனை செய்து பார்த்தபோது கடத்துவதற்காக 25 மணல் மூட்டைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை செய்ததில் அவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்சிற்றபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்கிற மணி (22) என்பது தெரிந்தது.

காவலாளர்கள் அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து புழல் சிறையில் அடைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios