கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்
போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை? என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
பேருந்தில் தானியங்கி கதவுகள்
பட்டினம்பாக்கத்தில் புதிய பணிமனை பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித் அவர், இந்த ஆண்டு புதிதாக பேருந்து வாங்க முதலமைச்சர் நிதி அளித்தார். முதற்கட்டமாக 100 பேருந்துகளை துவக்கிவைத்தார். இதனையடுத்து 73 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இன்னும் 2 மாத காலத்தில் 1666 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பயணிகள் படிகளில் தொங்கியபடி செல்வதை தடுக்க சிகப்பு நிற டீலக்ஸ் பேருந்துகளில் இருப்பது போன்று சாதாரண கட்டணம் வசூலிக்க கூடிய MTC பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்கவும் தனியியங்கி கதவுகள் மட்டுமல்லாது கதவுகள் அருகே உள்ள ஜன்னல் பகுதியும் முழுமையாக கண்ணாடிகள் கொண்டு திறக்க முடியாத வகையில் அடைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை
பணிக்காலத்தில் மரணமடைந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணியாளர்கள் குறைவாக உள்ளனர். இதன் காரணமாக கூடுதல் சுமை ஏற்படுகிறது. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வைத்து பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை?, நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம் ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருப்பதால்தான் காரணம் என கூறினார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்
கிளாம்பாக்கத்தில் கட்டுமான பணி முடிவடைந்துவிட்டது. கூடுதல் வசதிகளுக்கு செய்து தர சிஎம்டிஏ ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். கிளாம்பாக்கம் அங்கிருந்து ஆம்னி இயக்க வேண்டும். தற்போது அங்கிருந்து தான் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளம்பாக்கத்தில் இருந்த பேருந்து சேவே படிப்படியாக தொடங்கிவிட்டது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்படும்.
இதையும் படியுங்கள்
சென்னையில் இராவணனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு