பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தை தத்தெடுத்தல் மற்றும் குழந்தை கொடுத்தல் முறை உள்ளிட்டவற்றை மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் மகப்பேறு தொடர்பாக எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.