Asianet News TamilAsianet News Tamil

கொடைக்கானல் மலைச் சாலையில் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டுமாம்... எச்சரிக்கிறார் ஆட்சியர்!

Should be Carefully travel to Kodikanal mountain road
Should be Carefully travel to Kodikanal mountain road
Author
First Published Dec 1, 2017, 1:02 PM IST


கொடைக்கானல் மலைச் சாலையில் செல்லும் போது பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். 

கொடைக்கானலில் மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மழை அதிகம் பெய்து வருவதாலும், அங்கங்கே சாலைகள் சேதமடைந்து, மரங்கள் விழுந்துள்ளதாலும் எச்சரிக்கையுடன் பயணிகள்செல்ல வேண்டும் என்று கூறினார். மேலும், கொடைக்கானல் ஏரி மற்றும் ஏரிச்சாலைகள் பராமரிப்பு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.

Should be Carefully travel to Kodikanal mountain road

ஏரியை தூர் வார ஒதுக்கப்பட்ட 80 கோடி ரூபாய் திட்டம் தமிழக அரசால் கைவிடப்பட்டது. ஆய்வுகள் மேற்கொண்டு புதிய திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கன மழையால் தாமதப் பட்டிருக்கின்றது. மழை நின்றதும் நடவடிக்கைகள்  தொடரும். 

Should be Carefully travel to Kodikanal mountain road

கொடைக்கானலில் கன மழையினால் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார் மாவட்ட ஆட்சியர். குறிப்பாக, கொடைக்கானல் மலைச்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கவனமாக பயணிக்க வேண்டுகோள் விடுத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios