shop closing protest
ஐய்யோ வேண்டாம் ஹைட்ரோ கார்பன் திட்டம்… பொங்கி எழுந்த புதுக்கோட்டை வியாபாரிகள்..
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பூமியிலிருந்து ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை வலியுறுத்தி அம்மாவட்டம் முழுவதும் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், விவசாய நிலங்கள் பாழாகிவிடும் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இன்று வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பொது மக்களின் இந்த போராட்டத்துக்கு திரைத்துறையும் அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
