புதிய ரூ.2000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த 2 வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மணல் மாஃபியா சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் வருமானவரித்துறையில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது சுமார் ரூ.34 கோடி அளவிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள், 147 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்தனர். 

சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுக்கக் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, 34 கோடி ரூபாய் கைப்பற்ற சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட போது 2,3 வழக்கை ரத்து செய்யும்படி மனு அளித்திருந்தார். அந்த மனுவில் ஒரே குற்றத்துக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ரெட்டி முறையீடு செய்தார். சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து முதல் வழக்கின் கீழ் இனி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.