Sexual abuse of a 14 year old girl

சென்னை புரசைவாக்கத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை புரசவாக்கத்தை சேர்ந்தவர் வடுவதாசு. இவருடைய 14 வயதுடைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமைக்கு அனுமதிக்கபட்டார். அங்கு மருத்துவர் சிறுமி கருவுற்று இருந்ததாகவும் தற்போது கலைந்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியுற்ற பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவர் சிறுமியை வலுகட்டாயமாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக சிறுமி தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசாரிடம் வடுவதசு புகார் அளித்தார். பின்னர், போலீசார் மாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.