Sewer mix in drinking water People without drinking water for two weeks
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் கிழக்குப் பகுதியான திருவரங்கம் சாலை, தெற்கு பள்ளிவாசல், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக குடிநீருடன், கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால், மக்கள் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், பர்மா காலனி பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக குடிநீர் வழங்காததால், அந்தப் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை சீரமைக்க, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
