உச்சக்கட்ட பதற்றத்தில் சேலம்.....! அடுத்து என்ன நடக்கப்போகிறதோ....?

 தமிழகமே ஜல்லிகட்டுக்காக தொடர்ந்து விடாமுயற்சியை கைவிடாமல் போராடி வருகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் மாணவர்களே . மாணவர்களின் ஒன்றுபட்ட சக்தியால் நாடே ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், மாணவர்கள் இதுவரை அறவழி போராட்டத்தில் தான் எஐபாடு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, சேலத்தில் தற்போது நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தண்டவாளத்தில் அமர்ந்து, ரயிலை வழிமறித்தும், ரயில் மீது ஏறியும், தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சில ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தபட்டுள்ளது.

மேலும், ஆங்காங்கு வைக்கபட்டுள்ள பெரிய விளம்பர பதாகைகளின் மீது ஏறியும் , ஜல்லிகட்டுக்கு எதிராக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள் .

இந்நிலையில், ரயில் மீது ஏறிய மாணவர் ஒருவர், மின்சாரம் தாக்கி , ரயில் மேலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார் .இதனை தொடந்து சேலத்தில் மேலும் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது