selam is surrounds by rain water

சேலத்தில் தான்....டெங்குவிற்கும் முதலிடம் ...

போலி மருத்துவருக்கும் முதலிடம் ..

சேலத்தில் ஒரு பக்கம் கொசுதொல்லை அதிகம்...அதனால் வரக்கூடிய டெங்கு பெரிய சவாலாக விளங்கி வரும் நிலையில், போதிய மருத்துவர்களும் ,மருத்துவ வசதியும் இல்லாமல் மக்கள் இன்னல் பட்டு வரும் சமயத்தில்.....மீண்டும் வருண பகவான் மழையை கொட்ட.... தேங்குகிறது தண்ணீர்....

தண்ணீர் வற்றுவது எப்போது ?

கொசுவை ஒழிப்பது எப்போது ?

மக்களை காப்பாற்றுவது எப்படி ?

இவை அனைத்திற்கும் அரசு என்ன விளக்கம் அளிக்க போகிறது....அதாவது என்ன செய்ய போகிறது ?

ஆட்சியர் ரோஹினி பற்றிய புராணம் இப்போது எங்கும் பார்க்க முடியவில்லை...

காரணம், அத்தனை பிரச்னை சேலத்தில்.....சரி மழையால்,நீரில் மூழ்கிய சேலத்தில் உள்ள சில முக்கிய இடங்கள் என்ன என்பதை பார்க்கலாமா...

நீரில் மூழ்கிய சேலம் மாநகராட்சி நிர்வாகம்

சேலம் மாநகரம்

1.சத்திரம் திருமால் நூலகம்

2.சூரமங்கலம் மாநகராட்சிவரிவசூல் மையம்

3.அங்கன்வாடி மையம்

4.அம்மா உணவகம்

5. 27_வது கோட்ட சுகாதார அலுவலகம்

மற்றும் பாவேந்தர் தெரு, சத்திரம் காமராஜர் மண்டபம் பகுதிகளில் மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து குளம்போலதேங்கி நிற்கிறது.
விச பூச்சிகளும் நீரில் மிதக்கிறது. பலமுறை புகார் அளித்தும் லீபஜார் வரை சாக்கடையை தூர்வாராததே இதற்கு காரணமாக கூறப் படுகிறது

மக்கள் குமுறல்

வரி செலுத்தும் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத செயலிழந்த நிர்வாகம்,எங்கள் பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் மரணம் ஏற்படும் மரணம் ஏற்படும் வரை வேடிக்கை பார்த்து, பிறகு முதல்வரின் வழிகாட்டுதல்படி மாஸ் கிளினிங் என ஊடகத்தை அழைத்து போஸ் மட்டுமே கொடுக்கும் சேலம் மாவட்ட - மாநகராட்சி நிர்வாகம் என ஆதங்கத்தையும், உண்மை நிலை பாட்டையும் எடுத்து கூறுகின்றனர் மக்கள்

அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்.....பொறுத்திருந்து பார்க்கலாம்...ஆனால் இது பொறுத்திருந்து பார்க்க கூடிய விஷயம் இல்லை....