சேகர்ரெட்டி தொடங்கி................இன்னும் யார் யாரோ ? நெருங்கியது வருமானவரித்துறை ....!!!

தமிழகத்தில், வருமானவரித்துறையினர் நடத்தும் அதிரடி சோதனையில் மேலும் என்னவெல்லாம் சிக்கப்போவதோ..? யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் திக் என இருக்கிறதாம் பல்வேறு தரப்பினருக்கு ...!

சேகர் ரெட்டியிக்கு முறைகேடாக மணல் குவாரி ஒதுக்கியுள்ளதாக, ராம் மோகன் ராவ் மீது தற்போது எழுந்துள்ள மற்றொரு புகார் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனால், தற்போது சேகர் ரெட்டியிடம் தொடங்கியுள்ள மணல் பூகம்பம் விஸ்வரூபம் எடுத்து, தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

 சேகர் ரெட்டியிடம் தொடங்கிய இந்த பிரச்னை , இன்னும் எத்தனை அரசியல் வாதிகள் , எத்தனை தொழில் அதிபர்களை மாட்ட வைக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

 இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புள்ளிகளை மிக விரைவில் பிடிக்கும் என்றும், இதனால் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழும் எனவும் சிபி ஐ முன்னாள் உயர் அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.