தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை கிழித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார். மேலும், திமுகவை 2026 தேர்தலில் தனித்து நின்று வெல்ல சவால் விடுத்தார். பாலியல் வழக்கு குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்தார்.
தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில்: நான் நினைக்கும் போதுதான் ஆஜராவேன். விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டிச் சென்றது ஏன்? வீட்டு கதவா விசாரணைக்கு வரப்போகிறது? சம்மன் நான் படிக்கவா நாட்டு மக்கள் படிக்கவா? காவல்துறையின் சம்மனை கிழிப்பது கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்? சம்மனை கிழிப்பது அவ்வளவு குற்றமா? நீலாங்கரை காவல் ஆய்வாளர் வீட்டுக்கு வந்து காவலாளியை அடித்து இழுத்துச் சென்றது ஏன்? எனவும் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை என்ன விசாரணை நடத்தி உள்ளது?
என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால் பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள். என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்த பெண்ணை அழைத்து வருகிறது. என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. கல்லூரியில் படிக்கும் பிள்ளையை கடத்திச்சென்று கற்பழித்தது போல் சித்தரிப்பதா? புகார் மீது விசாரணை நடத்திய பின் தானே குற்றம் நடந்ததா என்பது தெரியும். நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே. ஒராண்டில் ஏழு முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளரும் நான்தான்.
தமிழ்நாட்டிலேயே அதிக வழக்குகளை சந்தித்த என் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து நின்று காசு கொடுக்காமல் திமுகவால் வெல்ல முடியுமா? என்னைப் போன்று தனித்து நின்று என்னை எதிர்க்க ஸ்டாலின் தயாரா? கருணாநிதி மகனா பிரபாகரன் மகனா என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம். தமிழா? திராவிடமா? என்பதை 2026 தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம் என சீமான் சவால் விடுத்துள்ளார். என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வெச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுகிறீர்களே என மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
