பெரம்பலூரில் நடைபெற்ற அறிவியல்–கணித–சுற்றுப்புற கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜவஹர்லால் நேரு மாவட்ட அளவிலான அறிவியல்–கணித–சுற்றுப்புற கண்காட்சி அறிவியல் விழா, பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த தினவிழா, இளைஞர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.

இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் காற்றாலை மின்உற்பத்தி, சூரியஒளி கலன்கள் அமைத்து ஆற்றல் சேமித்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, யானைகள் காட்டிற்குள் புகுந்து பயிர்கள் சேதத்தை தடுக்க கம்பி வேலியில் தேனீ கூண்டுகள் அமைத்து பாதுகாத்தல், டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை தடுத்தல், இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் குறித்த அறிவியல் படைப்பு, ஆசிரியர்களின் அறிவியல் படைப்பு, என மொத்தம் 120 படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.