school student rape by wager

சென்னையில் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய 27 வயது கட்டிடத்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

வடசென்னை பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவரின் மகள், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த மாணவி பள்ளியில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், கர்ப்பத்தைக் கலைப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அரசு மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில், மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டிற்கு அருகிலுள்ள கட்டிடத்தொழிலாளியை மாணவி மூன்றாண்டுகளாக காதலித்து வந்ததும் அவரால் கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான கட்டிட தொழிலாளியை கைது செய்த போலீசார், அவர் மீது குழந்தைக்கு எதிரான பாலியல் கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.