Asianet News TamilAsianet News Tamil

மகிழ்ச்சி செய்தி.. மெகா அறிவிப்பு.. 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நியமனம்.. முழு விவரம்..

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 9 மாவட்டங்களுக்கு கூடுதலாக 3 ஆயிரம் ஆசிரியர்கள் இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.  
 

School Education New Announcement - Allocation of 3 thousand Teacher Posts
Author
Tamilnádu, First Published May 2, 2022, 12:18 PM IST

இது குறித்து பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தனது கடிதத்தில்‌, 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை , மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌ பணியிடம்‌ நிர்ணயம்‌ மேற்கொள்ளப்பட்டதில்‌ 2021-22ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்‌ மேற்படி பணியாளர்‌ நிர்ணய கணக்கீட்டின் படி (6.6 ஆம்‌ வகுப்புக்கு 1:35 என்ற விகிதாச்சாரப்படியும்‌ 9:10ம்‌ வகுப்புக்கு 4:40 எண்ற விகிதாச்சாரப்‌ படியும்‌) கூடுதல்‌ தேவையுள்ள பள்ளிகள்‌ அதிகளவில்‌ கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்‌.

இந்த கணக்கீட்டின் படி கூடுதல் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் தரமான கல்விக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுவதால், தற்போது பட்டதாரி ஆசிரியர் நிலையில் இயக்குனரின் பொது தொகுப்பில் 4,675 ஆசிரியர் இன்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இருக்கிறது. தற்பொழுது முன்னுரிமை அடிப்படையில் ஒன்பது வட மாவட்டங்களுக்கு 3 ஆயிரம் பணியிடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 9 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் இதர படிகள் ஆகியவற்றை நடைமுறையிலுள்ள IFHRMS மூலமாக பெற்று வழங்கப்படும். தற்போது கூடுதலாக பகிர்ந்தளிக்கப்பட்ட பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் அரசாணைகளை இணைத்து ஒரே அரசாணையில் அனுமதித்து உரிய ஆணை வழங்குமாறு பள்ளி கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios