Asianet News TamilAsianet News Tamil

1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

பொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதது தொடர்பாக 1,000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்' அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

School Education  issue Notice to 1000 teachers
Author
Chennai, First Published Aug 17, 2018, 1:30 PM IST

பொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதது தொடர்பாக 1,000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்' அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  நடைபெற்றன.  இந்தத் தேர்வு ரிசல்ட் மே மாதம் வெளியாகின. இதையடுத்து பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மார்க்  கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத் துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

School Education  issue Notice to 1000 teachers

 இந்த மறுக்கூட்டல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட 2,500  மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள் சில நாள்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.  இந்த ரிசல்ட்டில் 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மார்க் மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளிக் கல்வித்துறை விடைத்தாள்களை தேர்வுத் துறை ஆய்வு செய்து அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள் என  பட்டியல் தயார் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து பொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதது ஏன் என இது தொடர்பாக 1,000 ஆசிரியர்கள்,  அலுவலர்களிடம் பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்  விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளது. அதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் விடைத்தாள்களை திருத்தியுள்ளனர், இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School Education  issue Notice to 1000 teachers

நோட்டீஸுக்கு சரியாக விளக்கம் அளிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தேர்வுத் துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios