காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 தமிழக வீர்ர்களுக்கு வீர வணக்கம்..சசிகலா அறிக்கை
காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இளவரசன், சுந்தர பாண்டி உள்ளிட்ட 19 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவர்களுக்கு நெஞ்சம் கனத்த வீர வணக்கங்களை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய தேசத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருந்த நமது இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் பனிச் சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகையோரிடமிருந்து இப்புண்ணிய பாரத தேசத்தை கண்ணிமையாய்க் காத்திடும் கடமையை மேற்கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், கண்ணந்தங்குடி கீழையூர் திரு. B. இளவரசன் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம், பல்லக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.சுந்தரபாண்டி ஆகியோர் என்கிற தகவல் ஆழ்ந்த வருத்தத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்/
நாட்டுக்காக தம் இன்னுயிரையே தந்திருக்கும் அந்த தன்னிகரில்லா தமிழகத்தின் தடந்தோள் வீரர்களுக்கு, அதிமுக சார்பில், வீர வணக்கங்களை சமர்ப்பிப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்
