Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் சிறைப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்‍க வேண்டும்…சசிகலா வலியுறுத்தல்!

sasikala statement
Author
First Published Jan 6, 2017, 7:42 AM IST


இலங்கையில் சிறைப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்‍க வேண்டும்…சசிகலா வலியுறுத்தல்!

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் கொண்டாடப்படவுள்ள நிலையில், மீனவர் குடும்பப் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரை துடைக்‍கும் வகையில், இலங்கை சிறைபிடித்துள்ள, 61 தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்‍கத் தேவையான நடவடிக்‍கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்‍கையில்.புதுக்‍கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், நடுக்‍கடலில் மீன் பிடித்துக்‍ கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு மீனவர்களுக்‍குச் சொந்தமான மீன்பிடி படகுகளை கைப்பற்றிக்‍ கொண்டு, அப்படகுகளில் இருந்த 10 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், 584 படகுகளில் கச்சத் தீவை ஒட்டியுள்ள இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்அவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர் - 
 
அன்றாட வயிற்றுப் பிழைப்புக்‍காக அலைகடலில் சொல்லொண்ணா இன்னல்களுக்‍கு இடையே மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவது கண்டிக்‍கத்தக்‍கது


இந்திய மீனவர்கள், அதாவது தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 51 பேர், இலங்கை சிறையில் இன்னமும் அடைக்‍கப்பட்டு இருக்‍கின்றனர் - அவர்களுக்‍குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள ஏராளமான படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்து வைக்‍கப்பட்டுள்ளன - இதனால் பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்‍கப்பட்டு  இருக்‍கிறது -  


தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் விரைவில் வரவுள்ளது - ஊரெங்கும் பொங்கல் திருநாள் நடைபெறவுள்ள இந்த வேளையில், மீனவர் குடும்பங்களில் தலைவனும், பிள்ளைகளும் இலங்கை சிறையில் அடைக்‍கப்பட்டு அல்லல்படும் சோகம் சூழ்ந்திருக்‍க வேண்டுமா? என வி.கே. சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, மீனவர் குடும்பப் பெண்களின், குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்‍கும் வகையில் இலங்கை அரசு உடனடியாக இந்திய மீனவர்களை விடுவிக்‍க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்‍கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்றும், அ.இ.அ.தி.மு.க சார்பில் வலியுறுத்திக்‍ கேட்டுக்‍கொள்வதாக கழகப் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா  வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios