மறுபடியும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை... மதுரையை தொடர்ந்து ராமநாதபுரத்திலும் பரபரப்பு!!
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவியது. இது பெரும் சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கு பிறகு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி டீன் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், நாங்கள் இப்போகிரேடிக், சரக்சபத், கெடவெரிக் ஆகிய 3 உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்றனர் என்று தெரிவித்தார். முன்னதாக மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தன்னிச்சையாக விதி மீறி ஹிப்போகிரேடிக் உறுதி மொழிக்கு பதிலாக சம்ஸ்கிருத உறுதி மொழி எடுத்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்ஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஹிப்போகிரேடிக் உறுதி மொழியை தவறாது கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மதுரை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமிக்கு டீன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து கல்லூரி டீன் பொறுப்பை கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் அமைப்பின் தலைவர் ஜோதீஸ் குமரவேல், துணை தலைவர் தீப்தா, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் பேசுகையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வில் ஹிப்போகிரடிக் உறுதி மொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர். உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியான மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அவசரகோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுத்துவிட்டோம். இதில் எந்த அரசியலும் இல்லை. கல்லூரி நிர்வாகத்தில் உள்ள யாரிடமும் இது குறித்து கேட்காமலேயே நாங்களாகவே உறுதிமொழியை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.