Rupees 71 crores worth Drugs seized At Chennai
திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றத்தில் 71 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் போதைப்பொருள் வைத்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகாரிகளுக்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து, குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.

அப்போது, தொழிற்சாலையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர். 11 கிலோ மெத்தம்பெட்டமைன், 90 கிலோ ஹெராயின், 56 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
.jpeg)
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 71 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக கிடங்கு உரிமையாளர் உட்பட 10 பேரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டது குறித்து அவரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பைவிட தற்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு மிக அதிகம் என்றும் இது மிகப்பெரிய சோதனை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
