robbery women arrested by police in chennai

சென்னையில் மயக்க வித்தையை காட்டி முதியவர்களிடம் வழிப்பறி செய்யும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஷாலினி என்ற பெண் தனது ஆடம்பர வாழ்க்கைக்காக 10 பேரை ஏமாற்றி திருமணம் செய்தார். அவர் மற்றொருவரை திருமணம் செய்ய மணக்கோலத்தில் அமர்ந்திருந்தபோது முன்னாள் கணவனின் உதவியோடு போலீசார் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை தயார் செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு வினோதமான முறையில் கொள்ளையடிக்கும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், பாண்டிபஜார், மாம்பலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதமாக ஒரு பெண் முதியவர்களிடம் வழிப்பறி செய்வதாக சென்னை காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

தியாகராய நகர் துணை ஆணையர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது மயக்கவித்தை காட்டி முதியவர்களிடம் வழிப்பறி செய்த பெண்ணை போலீசார் கண்டறிந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

விசாரனையில் அந்த பெண்ணின் பெயர் ஆயிஷா என்பதும், அவர் தனது மாய வித்தைகளை காட்டி தனியாகச் செல்லும் வசதியான முதியவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கைவரிசை காட்டி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

ஆஷா பெங்களூரில் இளைஞர்களை மயக்கி கொள்ளைடித்த வழக்கில் கைதாகி 2 ஆண்டு சிறையில் இருந்ததும் கடந்த டிசம்பர் விடுதலையான பின், தான் வைத்திருந்த ஸ்கூட்டரிலேயே சென்னைக்கு இடம்பெயர்ந்ததும் தெரிய வந்துள்ளது.

தன் மீதுள்ள கொள்ளை வழக்கு விசாரணைக்கும், தனது மகளின் திருமணசெலவுக்கும் தான் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக ஆஷா சவுந்தர்யா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஸ்கூட்டரும், 20 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண்களே அடுத்தடுத்து வழிப்பறி, போதை பொருள் தயாரித்தல், ஏமாற்றுதல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.