சென்னை சின்மயா நகரில் ஆப்பிள் வியாபாரியின் வீட்டில் நுழைந்த மர்ம ஆசாமிகள் 69 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
சென்னை சின்மயா நகர்,குமரன் நகர் 2வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ரமேஷ் (45).
இவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஆப்பிள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய ரமேஷ் குடும்பத்தாருடன் சீக்கிரமே உறங்க சென்றுள்ளார்.
அவர்கள் வசிக்கும் வீடு தனியாக ஒற்றை மாடியுடன் இருக்கும் வீடு ஆகும்.
நள்ளிரவில் மொட்டை மாடி வழியாக ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 69 பவுன் நகைகளை திருடிக்கொண்டு வந்த வழியே சென்று விட்டனர்.
அதிகாலையில் காய்கறி மார்கெட்டுக்கு செல்வதற்காக எழுந்த ரமேஷ் வீட்டின் பீரோ திறந்து கிடப்பதையும் உள்ளே இருந்த நகைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார.
தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்து வருகின்றனர்.
வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 69 பவுன் திருடிசென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
