ஓய்வு பெற்ற ஆசிரியர்.. பள்ளிக்கு செய்த உதவி - இறுதியில் முன்னாள் மாணவர்கள் அவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!
முப்பத்தி நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பில் சொந்த செலவில் உலக உருண்டையுடன் கொடி மேடை அமைத்துத் தந்த ஆசிரியர்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தவர் இராமன். இந்த பள்ளியில் கடந்த 27.06.1988ம் ஆண்டு, அது நடுநிலைப் பள்ளியாக இருந்தபோது அவர் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த பள்ளி கடந்த 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சுமார் 34 ஆண்டுகள் அந்த பள்ளியில் பணியாற்றிய நிலையில் இன்று அந்த பள்ளியில் இருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரிடம் பயின்ற மாணவர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அரசு வேலையிலும், உயர் பொறுப்புகளிலும் உள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் இராமன் பணி ஓய்வு பெறுகிறார் என்ற தகவலை அறிந்த முன்னாள் மாணவ, மாணவிகள், தற்சமயம் அங்கு பயின்று வருகின்ற மாணவர்களை ஒருங்கிணைத்து ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணி ஓய்வு பாராட்டு விழாவை நடத்தியுள்ளனர்.
தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிப்பெருந்திருவிழா கோலாகலம் !!
இந்த விழாவில் பள்ளியின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு தாங்கள் படிக்கின்ற காலத்தில் எவ்வாறு எல்லாம் ஆசிரியர் ராமன் தங்களுக்கு பாடம் எடுத்தார் எனவும், அன்போடு அரவணைத்தும், கண்டிப்பு காட்டினார் எனவும் பட்டியலிட்டு பேசினர். ஆசிரியர் ராமனின் கண்டிப்பு காரணமாகத் தான் தாங்கள் உயர்ந்த நிலையை அடைந்ததையும், ஆசிரியர்களின் கண்டிப்பு தான் ஒவ்வொரு மாணவனையும் உயர்த்தும் என்பதையும் பள்ளியின் பழைய மாணவர்கள் தற்போதைய மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்கினார்.
இதுஒருபுரம் இருக்க, தங்களுக்கு அறிவிப்பாதையை காட்டிய ஆசிரியர் ராமனுக்கு பணி ஓய்வு பரிசாக ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் பைக் (ஒன்றையும் பரிசாக வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மாணவர்கள். அதுமட்டுமின்றி விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள், பள்ளியின் தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு பரிசு பொருட்களையும் ஆசிரியர் ராமனுக்கு கொடுத்து திக்கு முக்காட செய்தனர்.
இதனால் விழா மேடையில் கண்கலங்கி ராமன் ஆசிரியரை கண்டு கிராம மக்களும் மற்றும் பள்ளி மாணவர்கள் கண் கலங்கியபடி அவரை வழி அனுப்பிவைத்தனர்.