டெல்லி குடியரசு தின விழா அலங்கார வாகன அணிவகுப்பில் தமிழகத்திற்கு மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது. 

தமிழகத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கரகாட்டைத்தை மையமாக கொண்டுஉருவாக்கப்பட்ட 

ஊர்திக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. 

நாட்டின் குடியரசு தின விழா கடந்த 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

 இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் டாங்கிகள், ஏவுகணைகள், விமானப் படைகளின் 

சாகசங்கள் மற்றும் கடற்படையின் ஆயுதம் தாங்கிய அதிநவீன கப்பல்களின் மாதிரிகள் அணிவகுப்புகள்இடம்பெற்றன.

அதேபோல், ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை உணர்த்தும் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது.

இதில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு முதலிடமும், திரிபுராவுக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது.

 தமிழகமும், மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கரகாட்டத்தை உணர்த்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 

அலங்கார ஊர்திக்காக இப்பரிசு வழங்கப்படுகிறது