relative attacked a girl and theft gold

சென்னை, அரும்பாக்கத்தில், பெண் ஒருவரை கத்தியால் குத்தி மர்மநபர் ஒருவர் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரும்பாக்கம், ஜெய் நகர் 1-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி விஜி. மகாலிங்கம் இன்று காலை வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகாலிங்கம்-விஜியின் உறவினரான முருகேசன் அப்போது வீட்டுக்குள் நுழைந்துள்ளார். முருகேசன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வீட்டிற்கு வந்த முருகேசனை வரவேற்ற விஜி, சாதாரணமாக பேசியுள்ளார்.

அப்போது, திடீர் என்று முருகேசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜியை குத்தியுள்ளார். இதில் வலி தாங்காமல் அலறியுள்ளார். அப்போது முருகேசன், விஜியிடம் இருந்த தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்.

விஜியின் அலறலைக் கேட்ட அருகில் இருந்தோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் விஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சி.எம்.பி.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விஜியை கத்தியால் குத்தி தப்பியோடிய முருகேசனையும் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.