அரியலூரில் நடைப்பெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில், வாகன விபத்தைக் குறைப்பதை பற்றிய விழிப்புணர்வு பற்றி காவலாளர்கள் நடத்தினர்.
சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் எ.சரவணவேலு தொடக்கி வைத்தார்.
அப்போது, அவர் மேலும் பேசியது:
“ஆண்டுதோறும் ஜனவரி 17 முதல் 23-ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு மூலம், வாகன விபத்துகளின் எண்ணிக்கை குறைப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சாலை விபத்துகள் நடைபெறாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தினை மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, ஊர் காவல் படையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
