ramnath govind meet edappadi palanisamy

குடியரசு தலைவர் தேர்தல் இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடியரசு தலைவர் வேட்பாளர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களை ராம்நாத் கோவிந்த் சந்தித்து ஆதரவு கோரினார். ராம்நாத் கோவிந்துக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உறுதி அளித்தனர்.

இதன் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கோரினார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆதரவு கோரினார்.