Asianet News TamilAsianet News Tamil

7 தமிழரின் 27 ஆண்டுகள் நடந்தது என்ன? முழு அலசல்!

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரின் விடுதலையை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது. 

Rajiv Gandhi murder case...What happened 27 years
Author
Chennai, First Published Sep 6, 2018, 1:10 PM IST

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரின் விடுதலையை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்திருக்கிறது. Rajiv Gandhi murder case...What happened 27 years

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை:

* 1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

* 1998 ஜனவரி 28-ல் பேரறிவாளன் உட்பட 26 பேருக்கு சென்னை தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

* 1999 அக்டோபர் 17ல் 7 பேரின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்தார். பின்னர் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

* 2000 ஏப்ரல் 28-ல் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்த கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.
 
* 2011 ஆகஸ்ட் 26-ல் தேதி 11 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கருணை மனுக்களளை நிராகரித்தார்.

* 2011 ஆகஸ்ட் 30-ல் ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையைக் குறைக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* 2014 பிப்ரவரி 18-ல் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

* 2014 பிப்ரவரி 19ல் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இம்முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இதையடுத்து 7 பேரை விடுதலை செய்யும் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.

* 2015 ஜூலை 11-ல் 7 பேர் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அறிவிக்கப்பட்டது. 

* 2015 டிச.2-ல் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை., மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக் கூறியது உச்சநீதிமன்றம்.

* 2016 பிப்ரவரி 14-ல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகமானது 7 பேர் குறித்த தகவல்களைக் கோரியது, தமிழக அரசின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு.

* 2016 மார்ச் 2-ல் 7 பேர் விடுதலைக்காக மத்தியஅரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது,

* 2018 ஏப்ரல் 16–ல் 7 பேரையும் விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.

* 2018 ஆக. 11-ல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதும் 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்து வாதிட்டது மத்திய அரசு.

* 2018 செப்டம்பர் 6 (இன்று) 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி வழக்கை முடித்து வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios