rajinikanth health is degrees and suiting cancelled and go to america for treatment
ரஜினிகாந்த் காலா படத்தில் நடித்து வரும் நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக அமெரிக்கா செல்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் மூலம் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறினார்.
பின்னர், அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ரஜினி பின்னர், கபாலி படத்தில் நடித்தார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீண்டும் பாதிக்கபட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு அங்கு உறுப்பு மாற்று சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார்.

அவரது உடல் நலம் குறித்து அப்போது தவறாக எழுதிய வலைதளத்தால் ரசிகர்கள் கொதித்து எழுந்தனர். பின்னர், ரஜினியின் செயலர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் உடல் நலம் தேறி வந்தாலும் அடுத்த படம் நடிப்பது பற்றி ரஜினி யோசித்து வந்த நிலையில் சங்கருக்காக எந்திரன் 2.0 படத்தில் நடித்தார்.பின்னர் மருமகன் தனுஷின் சொந்த படமான காலா கரிகாலா படத்திலும் நடிக்க துவங்கினார்.

இடையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியும் அதையொட்டி தான் அரசியலுக்கு வருவது பற்றியும் பேசி ரஜினி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனாலும் அவரது குடும்பத்தார் ரஜினி அரசியலுக்கு வருவதையும் , படத்தில் நடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். காரணம் ரஜினியின் உடல்நிலை இனி இது போன்ற நெருக்கடி மிகுந்த செயல்களில் ஈடுபடுவதால் பாதிப்படையும் என்பதால் தவிர்க்கும் படி கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் காலா படத்தில் நடிப்பதற்காக ரஜினி மும்பை சென்றிருந்தார்.படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையில் திடீரென ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா விரைகிறார். இன்றிரவு மும்பையிலிருந்து விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்கிறார்.
பின்னர் ஜூலை இறுதியில் சென்னை திரும்புகிறார். அதன் பின்னர் அவர் காலா படத்தில் நடிப்பாரா அல்லது படம் கைவிடப்படுமா என்பது அவரது உடல் நிலை குறித்த மருத்துவர்களின் அறிக்கையை பொறுத்தே என அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர். ரஜினிக்கு திடீர் என உடல் நலம் பாதிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
