தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வைப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

அதன்படி,

தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை மாலை அல்லது நள்ளிரவு முதல் இருக்கும்.

அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிகவும் மிதமான மழை இருக்கும் வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் துவங்கி கன்னியாகுமரி வரையுளள் கடலோர 13 கடலோர மாவட்டங்கள் இதனால் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,வட கடலோர மாவட்டங்களில் 66%சதவீதம் மழை இருக்கும் வாய்ப்பு உள்ளது .டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் 88%சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும், உட்புற நடு மாவட்டங்களில் மழை வாய்ப்பு எதுவும் இல்லை எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு மாத காலமாக  தமிழகத்தில் நல்ல மழை கிடைத்தது.இதனை தொடர்ந்து,தற்போது குளிர்காலம் குளிர்காலம் தொடங்கி உள்ள நிலையில்,மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற செய்து விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.