சென்னையில் சில்லென்ற காற்று..! நாளை  மழை - வானிலை ஆய்வு  மையம் தகவல்..! 

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டு உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை  மிதமான பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயத்தில் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டதுடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து உள்ளது.