rain is heavy in sabari malai

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலத்தில் மட்டும் அதிக அளவில் மழை பெய்து வருவதால், ஆங்காங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எரி, குளங்கள் என நிரம்பி, அணைகளிலும் வேகமாக தண்ணீர் நிரம்ப தொடங்கியது.

இதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், மழை வேண்டி பல கோவில்களுக்கு செல்வது உண்டு.ஆனால் கோவிலிலேயே மழை தண்ணீர் உட்புகும் அளவிற்கு மழை பெய்து வருகிறது என்றால் கேட்பதற்கே இனிமையாகத்தான் இருக்கிறது 

அந்த வரிசையில் .....

பழனி முருகன் கோவில் படிக்கட்டில் தண்ணீர் புரண்டு வந்த காட்சி வெகுவாக சமூக வலைதளங்களில் பகிரப் பட்டு வந்தது 

இதற்கு அடுத்த படியாக , மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மழை தண்ணீர் உட்புகுந்த அற்புத காட்சியை பார்க்க முடிந்தது 

பின்னர், இன்று கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கனமான மழையில் தோற்றமளிக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது 

ஆக மொத்தத்தில் இந்த வருடம் பெய்த மழையில் நனைந்து விவசாயிகள் மட்டும் மகிழ்ச்சி அடைய வில்லை...... கடவுளும் மழை வெள்ளத்தில் நனைந்து மகிழ்ந்து வருகிறார் என்றே எடுத்துக் கொள்ளலாம்