வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிகத்தல் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றப்புறப் பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாககவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் ஆய்வும் மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமானில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இதனால் தமிழகத்துகத்துக்கு பாதிப்பில்லை என்றும், தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவித்தது.
