இராமநாதபுரம்

பரமக்குடியில் தனியார் ஏடிஎம்-மில் ரூ.4 இலட்சத்து 5 ஆயிரத்து 700 திருடிய, ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியரை காவலாளரள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வடமலை மகன் விக்னேஷ் (24). இவர் தனியார் ஏடிஎம்-மில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்தார்.

அவர் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள டாடா இண்டிகோ வங்கி ஏடிஎம்-மில் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி அதிலிருந்த ரூ.4 இலட்சத்து 5 ஆயிரத்து 700-ஐ திருடிச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் வங்கிக்கிளை மேலாளர் வித்யாபாஸ்கரன் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விக்னேஷ் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.