ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களுக்காக உத்தர பிரதேச மாநில விவசாயிகளும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நெடுவாசல் விவசாயிகளுக்காவும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் பொருட்டு மெரினாவில் மாணவர்கள்  போராட்டம்  நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களின்  மூலம்   பரவலாக  பேசப் பட்டு  வந்தது. இந்நிலையில்   மெரினாவில்   நடைப்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக , மெரினாவில் உள்ள கடைகளை மூட அறிவுறுத்தியும், பொதுமக்களை வெளியேற்றியும் வருகிறது காவல்துறை. 

இதனை தொடர்ந்து, மெரினாவில்  போராட்டம் நடத்த போவதாக  தேவையற்ற   வதந்திகளை  பரப்புவோர்  மீது  கடும் நடவடிக்கை  எடுக்கப் படும் என   மயிலாப்பூர் துணை  ஆணையர்  பாலகிருஷ்ணன்  கடும் எச்சரிக்கை  விடுத்துள்ளார்

.அதாவது சமூகவலைத்தளங்களின் மூலம் மேலும் இளைஞர்கள் மெரினாவில்  ஒன்று திரண்டு  விடுவார்களோ  என்ற சந்தேகத்தில்,  முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார் மயிலாப்பூர் துணை  ஆணையர்  பாலகிருஷ்ணன்.  

இருந்தபோதிலும்   மெரினாவில்  போலீசார்  காவலையும் மீறி ,  தற்போது லயோலா  கல்லூரியை  சேர்ந்த  8  மாணவர்கள்  கடலில் இறங்கி போராட்டம்  நடத்தி வருகின்றனர் . போலீசார்  கடலில்  உள்ளே  சென்று அவர்களை  மீட்க முயன்றால்,  மாணவர்கள்   கடலுக்குள்  சென்று கொண்டே இருக்கீறார்கள். இதன் காரணமாக  போலீசார் செய்வதறியாது தவித்து  வருகிறார்கள்