அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு திறக்க மறுத்த பேராசிரியை நிர்மலா தேவியை கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று  போர்க்குரல்கள் எழுந்தன.

தமிழகம் எங்கும் கல்லூரி போராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்., தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், ஆளுநர் மற்றும்  உயர்கல்வி துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

இந்த நிலையில் போலீசார் நிர்மலா தேவியை கைது செய்ய சென்றனர்.  ஆனால் அவர், பல மணிநேரம் வீட்டை உட்புறம் பூட்டி கொண்டு திறக்க மறுத்து கண்ணாமூச்சி ஆடியுள்ளார். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து நர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.

நிர்மலா தேவி மீது பாலியல் தொந்தரவுக்கு ஆட்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.