Asianet News TamilAsianet News Tamil

"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு" - கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

Private water cane manufactures conduct a strike today onwards
Private water cane manufactures conduct a strike today onwards
Author
First Published May 28, 2017, 8:07 AM IST


நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி.என்னும் சரக்கு மற்றும் சேவை வரி முறை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

வரிவிதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்றது. அப்போது ஏ.சி இல்லாத ஓட்டல்களில் உணவுக்கு 12%, மது அருந்த அனுமதி பெற்ற ஏ.சி. ஓட்டல்களுக்கு 18% வரி, நட்சத்திர ஓட்டலுக்கு 28% உள்ளிட்டவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

Private water cane manufactures conduct a strike today onwards

மத்திய அரசின் இந்த வரி உயர்வு முடிவால் நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. உணவங்கள் மீதான வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் வரும் ஆம் 30  தேதி தமிழ்நாடு உணவகங்களின் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Private water cane manufactures conduct a strike today onwards

இதற்கிடையே குடிநீர் கேன்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக திரும்பப் பெறக்கோரி தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் இப்போராட்டத்தால் சென்னையில் கேன் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios