சப் இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினிக்கே இப்படி ஒரு தொல்லையா? ...காதல் பெயரால் திருநங்கையை கூட விட்டு வைக்காத  ஆண்..!

இந்தியாவில் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினியை காதலன் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் திருநங்கை ஆய்வாளரான தமிழகத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, கடந்த 2017-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பதவியேற்றார். தற்போது, சென்னை சூளைமேட்டில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பிரித்திகா யாஷினியும், கடலூரைச் சேர்ந்த ஜெனர்த்தனன் என்பவரும் முகநூலில் அறிமுகமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஜெனர்த்தனனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் சென்னை வந்த அவரிடம் கதலை முறித்துக்கொள்வதாக  பிரித்திகா யாஷினி  கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெனர்த்தனன் உதவி ஆய்வாளர்  பிரித்திகா யாஷினியை தாக்கியதாக கூறி அமைந்தகரை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.