சென்னை புழல் சிறையில் சில மாதங்களுக்கு முன்னர் மின் வயரை கடித்து ராம்குமார் தற்கொலைக்கு செய்து கொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமார் தரப்பினர் அதை மறுத்தனர். தற்போது அதே பாணியில் சிறைக்கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்று பிழைத்து கொண்டார்.

 சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக இருப்பவர் டெல்லி ராஜா . இவர் இன்று விசாரணைக்காக அழைத்து வரும்போது மின் பெட்டியை உடைத்து மின்சார கம்பியை பிடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளளார். 

ஆனால் காயத்துடன் பிழைத்து கொண்டார் , தற்போது கைதி டில்லிராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.