பொங்கல் விடுமுறை ரத்துக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்…சொல்கிறார் பொன்னார் !!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் ரத்தத்தில் ஒன்றிப்போன ஜல்லிக்கட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டை ஒரே அறிவிப்பில் பொசுக்கி விட்டனர் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும்.

இதனை தொடர்ந்து காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை பாலாறு பிரச்சனை என அனைத்து நதிநீர் பிரச்சனைகளிலும் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் மத்திய அரசின் விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகையை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களை கொந்தளிக்க செய்யும் இந்த அறிவிப்பில் பொங்கல் விடுமுறை என்பது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய விடுப்பு பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருப்பது தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் விடுமுறை ரத்து அறிவிப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் அதிகாரிகள் செய்த தவறுதான் இது என்றும், இதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.