மதுரையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை  நாகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீசார் திடீர் நகர் மற்றும் பெரியார் பேருந்து நிலையப் பகுதிகளில்  ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை  நடத்தினர். அதில் அவர்கள் இரண்டு பேரும் முன்னுக்கு முரனாக பதிலளித்தனர்.

இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் அப்பகுதிகளில் போதை மாத்திரைகள்  விற்பனை  செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பிரபாகரன் மற்றும் சரவணக்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.