Police arrested thief in koyembedu

தனது கை விரல் துண்டான நிலையிலும், ரத்தம் சொட்ட சொட்ட துரத்திச் சென்று கொள்ளையன் ஒருவரை போலீசார் ஒருவர் பிடித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜெகதீஷ் (17). பள்ளி மாணவரான இவர் நேற்று மாலை காஞ்சீபுரம் சென்று விட்டு, அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார். 

பின்னர் கொளத்தூர், செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் செல்வதற்காக 100 அடி சாலையில் ஜெகதீஷ் காத்துக் கொண்டிருந்தார். அங்கு திடீரென வந்த கொள்ளையன் ஒருவன், ஜெகதீஷிடம் இருந்த கைப்பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கார்த்திக், கொள்ளையனை விரட்டிச் சென்று பிடித்தார்.

போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, கொள்ளையன், அவரது கை விரலைக் கடித்துள்ளார். இதில் போலீசாரின் விரல் துண்டானது. விரல் துண்டாகி ரத்தம் வழிந்த நிலையிலும் கொள்ளையனை விடாமல் துரத்திச் சென்று பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையனைப் பிடித்துள்ளார் கார்த்திக்.

போலீசார் நடத்திய விசாரணையில், பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (24) என்பது தெரியவந்தது. ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

விசாரணையில், அவர் பல்லாவரம் பம்மலைச் சேர்ந்த அய்யப்பன்(24) என்பதும் அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. பிறகு அவரை கைது செய்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த காவலர் கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.