Police announce 2 lakes rewards on Ramajayam Murder case

திமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்து 5 ஆண்டுகளாகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

 ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் போலீசார். ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர் போலீசார். 

நகரின் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வமாக இந்த போஸ்டரை பார்த்து செல்கின்றனர். போலீசாரின் இந்த முயற்சி பயனளிக்கிறதா? என்பதை பார்ப்போம்.